The Direct Link

Search Any Links, Share Direct Links

General

The Kadaiyelu Vallalgal

By Banu, Published on 2 years ago, 339 Views
Tags : #the_kadaiyelu_vallalgal #நெல்லிக்கனியை-நாகம்_ஒன்று

தமிழகத்தில் ஏழு வள்ளல் பெருமக்களைப் பற்றி அறிந்துள்ளோம்

தமிழகத்தில் ஏழு வள்ளல் பெருமக்களைப் பற்றி அறிந்துள்ளோம். அவர்கள். பாரி. ஓரி.அதியமான்   நள்ளி ஆய் பேகன் காரி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார். இவர்களில் எத்தனை பேரை பற்றி நமக்குத் தெரியும். அவர்களில் அதியமானi பற்றி அறிந்தவர்கள் அதிகம். காரணம் ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்ததால் தெரியும். அந்த நெல்லிக்கனியை உண்டால் அவருக்கு நரை திரை மூப்பு கிடையாது என அறிந்தும் அதனை தான் உண்ணாமல் தன்னை பாட வந்த ஒளவையாருக்கு பரிசளித்தான்.

இந்த வள்ளல்கள் நாட்டின் நலனைப்பற்றி மட்டுமல்லாமல் அங்குள்ள செடி கொடிகள் மற்றும் உயிருள்ள அனைத்து உயிர்களின்மீதும் அதிகமான அன்பினை வெளிப்படுத்தியதால் தான்.

பாரி: முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தான் தான் வீதிவலம் வரும் பொழுது வளருவதற்கு பிடிதாரமின்றி கிடந்த முல்லைக் கொடிக்கு தன் தேரின் மீது படர செய்து தான் நடந்தே அரசவைக்கு திரும்பினான்.

ஓரி: வல்வில் ஓரி எனப்படும் அரசன். வில்வித்தையில் வல்லவன் ஆனதால் இப்பெயர் வந்தது. கொல்லிமலையில் உள்ள கலைஞர்களுக்கு தன் நாட்டைப் பரிசளித்தான்.

காரி: மலையமான் என்றும் கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும்  காரி தன்னிடம் கொடை கேட்டு வருபவற்கு இன்முகம் மாறாதும் இனிய சொற்களையும்  கூறி கேட்பதை கொடுப்பவன் ஆதலால் இவன் காரி எனப்பட்டான்.

ஆய்: ஒளி பொருந்திய நீல நிறமுள்ள ஆடை ஒன்றினை நாகம் ஒன்று இவருக்கு கொடுத்ததாம். இவர் அதனை ஆலமரத்தின் அடியில் இருந்த சிவபெருமானுக்கு கொடுத்தராம்.

 

நள்ளி: அதிக மலைகள் கொண்ட நாட்டினை ஆண்டவன் ஆதலால் நளிமலை நாடன் என்றும் கோப்பெரு நள்ளி என்றும் பெரு நள்ளி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டான் இவர் வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாது வேறு யாரிடமும் இனி கேட்காதவாரு வாரி கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர்.

பேகன்:

ஒரு நாள் வீதி வலம் வரும் பொழுது மயில் ஒன்றினை கண்டான். அந்த மயில் குளிரால் நடுங்குவதை அறிந்து தனது மார்பில் அணிந்திருந்த விலை உயர்ந்த போர்வையை அதற்கு போர்த்தி விட்டான். ஆதலால் மயிலுக்கு போர்வை தந்த வள்ளல் எனப்பட்டான்.

இந்த ஏழு பேர் தான் வள்ளல்களா? இல்லை இந்த பூமி எண்ணற்ற வள்ளல்களை பெற்றிருக்கிறது. ஏன் நமது தாயும் தந்தையுமே நமக்கு பல தியாகங்களை செய்திருக்கின்றனர் ஆதலால் அவர்களே நமது கண்கண்ட வள்ளல்கள் என்பேன்.


Go to Link →

Report Inappropriate content / Link not working ?