The Direct Link

Search Any Links, Share Direct Links

General

GANDHIMAHAN

By Banu, Published on 2 years ago, 395 Views
Tags : #gandhimahan #தன்_தாய்க்கு_கொடுத்த_சத்தியத்திலிருந்து_சிறிதும்_மாறாது_இருந்தார்._அடிமை_நிலை_நீடித்திருக்காது

இது தனி ஒரு மனிதனுக்கு கிடைத்த வெற்றி

மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தி மகான் பிறந்த பூண்ணிய  பூமியாம் நம் இந்தியா. இந்தியாவின் சுதந்திரம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கத்தியின்றி இரத்தமின்றி அகிம்சையில் நாம் சுதந்திரம் பெற்றோம்.

இது தனி ஒரு மனிதனுக்கு கிடைத்த வெற்றி தான். எத்தனையோ சுதந்திர போராட்டக்காரர்கள் இருக்கும் பொழுது நாம் ஏன் காந்தியை மட்டும் போற்றக் காரணம் என்ன? காந்தியின் மன உறுதி தான். காந்தி இந்திய மக்களின் மன உறுதியை வெளிப்படுத்தினார். இந்தியர்களிடம் ஒற்றுமை உணர்வினை வளர்த்தார். நாம்; சுதந்திரம் அடைந்து விடுவோம் என்ற மன வைராக்கியத்தை ஒவ்வொரு இந்தியரிடமும் விதைத்தார். இந்த மன உறுதி அவர் அவரின் தாயாரிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம் ஆகும். எங்கு பெண்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ அந்த இடம் மேன்மேலும் வளரும். அவ்வாறு தான் காந்தி தன் மனைவியையும் உறுதியுள்ள ஒரு பெண்மணியாகப் பார்த்தார். காந்தி மேலை நாட்டுக்கு சென்ற போதும் தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்திலிருந்து சிறிதும் மாறாது இருந்தார். இந்த உறுதியான நம்பி;க்கை தான் நாம் விடுதலை பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது.

ஓவ்வொரு இந்தியனின் மனதிலும் இருந்த பயத்தை போக்கி மனதிற்கு வெளிச்சத்தை கொடுக்கும் வார்த்தைகளை பதித்தார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆண்கள் பெண்கள் என அனைவரையும் ஒன்று சேர்த்தார். அரைநிர்வாணப்பக்கிரி என்று ஏளனப்படுத்தப்பட்ட போதும் அவரது ஆழ் மன உறுதியும் தேசத்தின் விடுதலைக்கு அவரின் அகிம்சா கொள்கைகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

காந்தியின் சத்தியச்சோதனை புத்தகம் மட்டும் அன்று அது ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியாகும். 

நம் தேசத்தந்தை காந்தி அவர்கள் சத்தியத்தின் மீது கொண்ட நம்பிக்கை தான் இந்தியா சுதந்திரம் அடைய முக்கிய காரணமாகும். அவர் மனிதனிராக பிறந்து மகாத்மாக உயர்ந்தார். என் நாட்டு மக்கள் சரியான ஆடையின்றி இருக்கும் பொழுது தான் மட்டும் பகட்டான ஆடை உடுத்துவது பாவம் என்றார்? இன்றைய தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் யோசியுங்கள்?

சிக்கனமாக வாழ்வதே சிறந்தது என்றார். எளிமையும் நேர்மையும் கொண்ட உறுதியான மனிதர். அவர் பிறந்த நாட்டில் நாம் இருப்பது நமக்கு பெருமையே. சிறப்பினும் சிறப்பு அவரின் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இன்றளவும் அவரின் பெயருக்கு களங்கம்; ஏற்படுத்தாது வாழ்கின்றனர் என்பதே அவர்களுக்கும்  நாம் நமது மகிழ்ச்சியினை தெரிவிப்போம். 

 

காந்தி என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். காந்தி நம் கைகளில் இல்லையெனில் நமது வாழ்வு சிறக்காது. காந்தியின் கருத்துக்கள் நம் மனதில் இல்லையெனில் நமது வாழ்வு சிறப்படையாது. இன்று இருக்கும் பேஸ்புக்  யூடிப்  வாட்ஸ் அப்  போன்ற வசதிகள் அன்று இருந்திருந்தால்  நாம் 300 ஆண்டுகள் சொந்த நாட்டில் அடிமைகளாக வாழும் அடிமை நிலை நீடித்திருக்காது. மிக எளிதாக ஒன்று கூடி இருப்போம். எளிதில் சுதந்திரம் அடைந்திருப்போம்.

 


Go to Link →

Report Inappropriate content / Link not working ?