The Direct Link

Search Any Links, Share Direct Links

General

The Tajmahal

By Banu, Published on 2 years ago, 380 Views
Tags : #செழுமையை_பறைசாற்றும்_ஒரு_சின்னம்_தான்

பளிங்கு கற்களை எடுத்து விற்று விடலாம் என்று ஆங்கிலேய அரசாங்கம் கருதியது.

உலகின் ஏழு அதிசியங்களுள் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல இந்தியாவின் செழுமையை பறைசாற்றும் ஒரு சின்னம் தான். ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் போது இந்த தாஜ்மகாலை பாதுகாக்க மாபெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன் மேல் குண்டுகள் தாக்கா வண்ணம் ஒரு மேற்கூரை அமைக்கப்பட்டது.  பின்னர் பொருளாதார பாதிப்புகள் அதிகமாக இருந்நதால் இதில் இருக்கும் பளிங்கு கற்களை எடுத்து விற்று விடலாம் என்று ஆங்கிலேய அரசாங்கம் கருதியது.

நல்லவேளை இம்முயற்சிகள் எல்லாம் நடக்கவில்லை.இருபது வருடம் இந்தியர்களின் அயராத உழைப்பினால் கட்டப்பட்ட பளிங்கு மண்டபம் இன்றும் நம் கண்களை குளிர்வித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தாஜ்மகாலை ஷாஐகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக அவள் இறந்த பிறகு கட்டப்பட்டது. அவளது கல்லறை இருமுறை வௌ;வேறு இடங்களில் புதைக்கப்பட்டு மூன்றாம் முறையாக தோண்டி  எடுக்கப்பட்டு இந்த தாஜ்மகாலில் புதைக்கப்ட்டுள்ளது. அத்தகைய சிறப்பு அவளுக்கு  கொடுக்கப்பட்டதற்கு காரணம் என்ன?  மும்தாஜ் ஒரு பேரழகி மட்டுமல்ல. அவள் அறிவிலும் சிறந்தவள். ஒருமுறை மன்னனின் பிறந்த நாள் விழா கோலகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்பொழுது நாட்டு மக்கள் மன்னனுக்கு தங்களால் இயன்றதை பிறந்த நாள் பரிசாக கொடுத்தனர். அப்பொழுது அவருக்கு ஒரு பரிசு வந்நது. அது விலையுயர்ந்த வைரக்கற்களால் ஆனது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால் சற்று நேரம் சென்ற பின்னர் தான் தெரியவந்தது அது வைரக்கல் அன்று சாதாரண கற்கண்டுகளால் செய்யப்பட்டது என்று அந்த பரிசினை மன்னனுக்கு அளித்தவர் மும்தாஜ். அவரது புத்திசாதுர்யத்தால் வியந்த மன்னர் அவளை மணம் புரிந்தார். 

மேலும் முகலாய வரலாற்றில் நிர்வாகத்தில் பங்கேற்ற பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு தான். அதில் நிர்வாகத்திலும் பங்கேற்றவர். 

எனவே தாஜ்மகால் அன்பின்  நினைவிற்கு மட்டும் கொடுத்த பரிசு அன்று. அவளின் அறிவுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையான பரிசு என்றே சொல்லலாம். 

 


Go to Link →

Report Inappropriate content / Link not working ?