The Direct Link

Search Any Links, Share Direct Links

General

LOTUS

By Bhuvana, Published on 2 years ago, 379 Views
Tags : #"சேற்றில்_முளைத்த_செந்தா_மரை_போல”

தாமரை ஒரு அழகான மலர்

-

தாமரை ஒரு அழகான மலர். நம் நாட்டின் தேசிய மலர். இது ஒரு நீர்வாழ்த் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். இந்தியா,எகிப்து நாடு களில்    தாமரைப்பூவை புனிதமாக கருதப்படு வதுடன் வழிபாட்டிற்கும் பயன் படுத்தப்படுகிறது. தாமரையின் பூக்கள், இதழ்கள் பண்டைய கால கட்டிடக் கலையில் காணலாம். தாமரை காலையில் மலரும். மாலையில் குவியும். வெப்பத்தையும்,ஒளியையும் சூரியன் தருவதால் காலையில் மலருகிறது.  

              தாமரை பூப்பது சேற்றில் தான். உயந்தவர்கள் எளிய குடும்பத்தில் இருந்து வருவர் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு .அதனால் தான் அவர்களை "சேற்றில் முளைத்த செந்தா மரை போல” என்று போற்றுகிறார்கள்

            வாழ்க்கை புனிதம் நிறைந்தது. தாமரையும் புனிதம் நிறைந்தது. தாமரை, சூரியகாந்தி இரண்டு பூக்களுமே சூரியனைப் பார்த்து மலரும். இதில் சூரியகாந்திக்கு இல்லாத சிறப்பு தாமரைக்கு உண்டு.சூரியனைப் பார்த்து மலர்ந்து அது போகிற திசையில் பயணிப்பதை மட்டுமே சூரியகாந்தி செய்யும். ஆனால் தாமரையோ சூரியன் மறைந்ததும் அதன் மடல்கள் வாடும்; அப்புறம் மூடும். எதற்குத் தெரியுமா தனக்கு வாழ்வுதந்த சூரியனைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டேன் என்று வாழும் உத்தமிதான் இந்த தாமரை. இது தான் தாமரையின் தனிச்சிறப்பு

         சரோஜம் ,நளினம் ,அரும்பு, முண்டகம் ,ராஜிவ,சரோஜா, நளினி, பத்மா,அம்புஜம் ,ஜலஜா, கமலி  இந்த பெயர்கள் தாமரையின் பெயர்கள்  என்று பலருக்கு தெரியாது.

         “தாமரை இலை தண்ணீர் போல எவ்வளவு மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவு நீர் இருந்தாலும், அதில் மிதக்கும் தாமரையின் இலையில் தண்ணீர் ஒட்டாது. குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, அமைப்பிலோ உறுப்பினராக இருக்கும் ஒருவர், பட்டும்படாமல், எதிலும் ஈடுபடாமல் இருப்பதைக் குறிப்பிட இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

                   தாமரை தனக்கு தேவையான நீரை மட்டுமே உறிஞ்சும்.வேற தண்ணீர் இலையில் பட்டால் உருண்டோட செய்து, முத்து முத்தாய் நிற்கும்.சேற்றில் வளர்ந்தாலும் பூவும் இலையும் சுத்தமாக இருக்கும். இது தாமரையின் மேலும் ஒரு சிறப்பு. இறுதியாக செல்வத்தின் அதிபதியான மகாலெட்சுமி வீ ற்றிருப்பது தாமரை  மலர் தான்.பெருமாளுக்கு பிடித்த மலர் தாமரை தான்.

 


Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?