The Direct Link

Search Any Links, Share Direct Links

General

Elephant

By Banu, Published on 1 year ago, 530 Views
Tags : #யானைகளை_தெய்வமாக_மதிக்கும்_நமது_நாட்டில்-_யாசகம்_வாங்க_பயன்படுத்துவது_நியாயமல்ல

ஞாபக சக்தியிலும் மற்ற ஐ{வராசிகளுக்கு உதாரணமானவையே. தனக்கு நன்றி செய்தவர்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை

மெத்துமெத்தென்று பஞ்சுபோல இருக்கும். அவைகளில் ஏதேனும் சிக்கிக் கொண்டால் அவைகள் அழுகி உயிரினையே இழக்க நேரிடும்.

உலகில் நீண்ட நாள் உயிர்வாழும் உயிரினங்களில் யானைகள் ஒரு உயிரினம். இவைகள் உருவத்தில் மட்டும் பெரிதல்ல ஞாபக சக்தியிலும் மற்ற ஐ{வராசிகளுக்கு உதாரணமானவையே. தனக்கு நன்றி செய்தவர்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை. சிறு சிறு விஷயங்களை கூட ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஒரு அற்புத உயிரினம். இன்று அழிந்து கொண்டிருப்பவை அவைகள் பெரும்பாலும் மனிதர்களின் வக்கிர செயல்களாலேயே அழிவை சந்திக்கின்றன. அவைகளின் கால் பாதங்கள் மெத்துமெத்தென்று பஞ்சுபோல இருக்கும். அவைகளில் ஏதேனும் சிக்கிக் கொண்டால் அவைகள் அழுகி உயிரினையே இழக்க நேரிடும். காடுகளில் மனிதர்கள் பயன்படுத்தும் குப்பிகள் பல கால்களில் பதிந்து அவைகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை மிக அதிகம். யானைகளை தெய்வமாக மதிக்கும் நமது நாட்டில் இவ்வாறு நடப்பது மனிதர்கள் மற்ற உயிரினங்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். கோயில் யானைகள் கூட மனிதர்கள் யாசகம் வாங்க பயன்படுத்துவது நியாயமல்ல. யானைக்கு தன் பலம் தெரியாத நிலையில் மனிதன் பிழைத்துக் கொள்வான். யானை தன் பலத்தை காட்ட நினைத்தால் மனிதன் நிலை பரிதாபமே. மனிதன் இந்த பூமிக்கு தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த பிறந்துள்ளதாக கருதுகிறான். ஆனால் கோடான கோடி ஐ{வராசிகளுக்கும் இந்த பூமியே தாய் வீடு. மற்ற ஐ_வராசிகளையும் நேசித்தால் மட்டுமே இந்த பூமி இன்னும் பூரணத்துவம் பெறும். தனக்கென வாழ பிறர்க்கென வாழும் மனிதர்கள் இன்னும் இருப்பதாலேயே இந்த பூமி இன்னும் நிலைபெற்று இருக்கின்றது என்பதனை மறக்க வேண்டாம். யானைகளின் கம்பீரத்தை பார்த்து மகிழாத மனம் இங்கே உண்டா? யானைகள் இல்லாத திருவிழாக்களை நாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது யானைகளுக்கே மிகப் பொருத்தம். யானைகளை பாதுகாப்போம். நம் கண்முன் காணும் மிகப் பெரிய உருவம் உள்ள விலங்கு மட்டுமல்ல நமது வாழ்வோடும் ஒன்றிணைந்த உயிரினம். அவைகளின் காது மடல்களை இரசிக்காத மனிதன் உண்டா? அவைகளின் தும்பிக்கைகளை பார்த்து மிரள்வோம் ஆனால் அவைகள் தும்பிக்கைகளின் மூலம் தண்ணீரை பாய்ச்சினாலோ மகிழ்ச்சி அடைவோம். யானை சவாரி செய்து குழந்தைகளுக்கு தைரியம் கொடுப்போம்.இவ்வாறு இந்த உருவத்தை பார்த்து பயந்தாலும் இனம் புரியாத பாசத்தினையும் வைத்துள்ளோம்.சற்றேனும் கவனம் கொள்வோம். அழிவிலிருந்து அந்த உயிரினத்தை காப்போம். அழியாமல் காப்போம். ஆனந்தமாய் திருவிழாக்கள் கொண்டாட யானைகளை கொண்டாடுவோம்.

Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?