The Direct Link

Search Any Links, Share Direct Links

General

NAVARATHIRI CELEBRATION

By Banu, Published on 1 year ago, 368 Views
Tags : #Navaratri #Dhasara #ஒவ்வொரு_நிமிடமும்_நாமும்_நமது_செயல்களும்_இறைவனால்_கண்காணிக்கப்படுகிறது

ஒரு தீய சக்தியை அழிப்பதற்காக- ஒரு பெண்சக்தியால்; தான் அழிக்கப்பட வேண்டும் என்ற வரத்தினை மகிஷாசுரன்

தங்களது சக்தியை முழுவதுமாக தேவிக்கு அர்பணித்து சக்தியற்ற நிலையில்

இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் சிறப்பானதாகவும் முக்கியமானதாகவும் போற்றப்படும் விழாக்களில் நவராத்திரி கொண்டாட்டமும் ஒன்று. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒன்பது நாள் விழாவும் ஒரு தீய சக்தியை அழிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் பெரும் முயற்சி ஆகும். தீபாவளி வந்து விட்டது என்பதனை அறிவிக்கும் ஒரு விழாவாகவே இதனை பார்க்கின்றனர்.நவராத்திரியின் இந்த உற்சாகம் தீபாவளி வரையும் தொடர்வதை உணரலாம். ஒரு பெண்சக்தியால்; தான் அழிக்கப்பட வேண்டும் என்ற வரத்தினை மகிஷாசுரன் பெற்றிருக்கிறான். தனது கர்வம் அழிந்து தனது தவம் அழிந்து போகப் போகிறது என்றவுடன் அவன் எவ்வளவு ஆக்ரோஷமாக சண்டை செய்திருப்பான் என்பதை அறியுங்கள். ஆனாலும் சக்தியின் வடிவமான தேவியோ அந்த அசுரனின் ஆணவத்தையும் அவனோடு சேர்த்து அழித்தாள். கொலு வைப்பதற்கான காரணம் மகிஷாசுரனை அழிப்பதற்காக தேவர்கள் தங்களது சக்தியை முழுவதுமாக தேவிக்கு அர்பணித்து சக்தியற்ற நிலையில் சிலையாக நின்ற காரணத்தினால் தான் கொலு வைக்கின்றோம். ஓன்பது நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின் போது வீடுகளில் கொலு வைத்து தினந்தோறும் வீடுகளுக்கு வருபவர்களுக்கு மங்களகரமான பொருட்கள் கொடுத்து மனம் நிறைவோடு அனுப்பும் பழக்கமும் இன்றளவும் நிலவி வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகள்; தவத்தின் பலனை அனுபவிக்காமல் தனது ஆணவத்தினால் அழிந்தான் அசுரன் மகிஷாசுரன். கடுகளவு உள்ளத்தில் கர்வம் இருந்தாலும் கடவுளை அடையமுடியாது இதுவே நிதர்சனம். உலகில் பிறக்கும் எந்த ஒரு ஆத்மாவும் அதன் கர்ம பலனை அனுபவிக்காமல் இறைவனை அடையமுடியாது. ஓவ்வொரு நாளும் நமக்கு கிடைத்த பொக்கிஷமே. நாம் நன்மைகளை அதிகம் செய்வோம். கடவுள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது தூய உள்ளமே. துவிர பொன்னும் பொருளும் அல்ல. ஒவ்வொரு நிமிடமும் நாமும் நமது செயல்களும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது. நாம் நமது சந்ததிகளுக்கு சொத்துகளை விட்டுச்செல்ல வேண்டாம். நல்ல புண்ணியங்களை விட்டுச்செல்வோம். பெண்களின் விழாவான இந்த தசர திருவிழாவினை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடும் வீட்டில் உள்ள அனைவரும் இந்த சந்தோஷத்தில் உற்சாகமாக பங்கேற்கின்றனர்.ஒவ்வொரு நாளும் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. மனிதii தெய்வம் நிலைக்கு இந்து தர்மங்கள் உயர்த்துகின்றன. கோயிலில் கொடுக்கப்படும் முதல் மரியாதையும் அதையே குறிக்கிறது. ஆனால் மனிதன் என்றுமே தெய்வமாக முடியாது. ஆனால் தெய்வத்தால் உயர்த்தப்படலாம். அல்லது தெய்வம் தனக்குள் அந்த ஆத்மாவினை சுவிகரம் செய்து பரிசுத்த ஆத்மாவாக மாற்றி விடும். சுத்தம் அல்லது தூய்மை இவைகள் கடவுளை அடையும் வழிகளில் ஒன்று. எனவே மனதால் சுத்தமடைவோம். பூக்களைப் போல் மென்மையாவோம். தீயசக்தி அழிந்து உலகில் ஆக்கசக்தி பெருகிடவும். ஆணவம் அகங்காரம் ஒழிந்து அன்பு நிலைபெற்றிடவும் நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம். இதுவே தசராவிழாவின் நோக்கமாகும்.

Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?