The Direct Link

Search Any Links, Share Direct Links

Movies

தேர்தல் பத்திரம்: அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ பாஜகவை பாதுகாக்கும் SBI வங்கி

By Mariammal, Published on 6 months ago, 102 Views
Tags : #Election_India

தேர்தல் பத்திரம்: அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ பாஜகவை பாதுகாக்கும் SBI வங்கி தேர்தல் பத்திரம் (Electoral bond)என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு உறுதிமொழி பத்திரம் (Promissory note) போன்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு அதிரடி தீர்ப்பில் மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டத்தை சட்டத்திற்கு புறம்பான ஒரு திட்டம் என்று அறிவித்தது. அந்த தீர்ப்பின்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்த நன்கொடைகளின் முழு விபரங்களையும் வெளியிட அறிவுறுத்தியது. அதேபோல், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பொதுவெளியில் மார்ச் 6, 2024 க்குள் வெளியிட்டும், அந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கிடுமாறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரமும் பாஜகவும்: உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தீர்ப்பு தேர்தலில் புழங்கும் கருப்புப்பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான உத்தரவாக பொதுமக்கள் கருதினார்கள். இந்த தீர்ப்பினால் நிலை குலைந்தது பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். ஏன் என்றால், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதுவரை பெற்ற மொத்த நன்கொடை தொகை ரூ.12,000 கோடி. இதில் குறிப்பாக பாஜக மட்டும் ரூ. 6,566.11 கோடி தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ள செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக மட்டுமே பெற்றது 55 சதவீதமாகும்.

இதன்மூலமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக மட்டுமே பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறது என்கிற உண்மை பட்டப்பரிவர்த்தனமாக மக்கள் மன்றத்தில் தெரியவந்துள்ளது. ஆனால் மோடி அரசோ, இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களை வெளியிடக்கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. மோடியின் இந்த அழுத்தம் காரணமாக தற்போது பாரத ஸ்டேட் வங்கியும், தேர்தல் பங்கு பத்திர விபரங்களை அளிக்கும் காலக்கெடுவை ஜூன் 30, 2024 வரை நீட்டித்து தருமாறு நேற்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி பாஜகவின் இத்தகைய முறையற்ற பணப்பரிவர்த்தனைகளை மூடிமறைப்பதோடு மட்டுமல்லாமல், பாஜக தேர்தலில்போது செலவிடுவதற்கு வசதியாக இத்தகைய கருப்புப்பண புழக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?