The Direct Link

Search Any Links, Share Direct Links

General

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை - 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்கள்

By Mariammal, Published on 6 months ago, 67 Views
Tags : #TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை - 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்ற சூளுரையுடன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தங்களது பணி தொடரும் என அறிவித்தார். இதையடுத்து, தங்களது கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, மகளிரை கவுரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தலைமையில் புதிய அணி ஒற்றை நேற்று (மார்ச்-7) அறிவித்தார். அதன்படி, மாநில செயலாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரையும் நியமித்தார். அத்துடன், மாநில பொருளாளராக கோவையை சேர்ந்த சம்பத்குமார், மாநில துணைச் செயலாளர்களாக மதுரையை சேர்ந்த விஜயன்பன் கல்லணை மற்றும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு ஆகியோரையும் நியமித்தார். நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியிருந்த நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையத்தளம் உள்ளிட்டவற்றிகான QR cord மற்றும் லிக்குகளை தவெக தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

குறிப்பாக மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த உறுப்பினர் சேர்க்கையானது 15 மணி நேரத்திற்குள் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணபித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பலர் ஒரே சமயத்தில் விண்ணப்பித்துள்ளதால் பலருக்கு குறுஞ்செய்தியானது தாமதமாக அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறியிருந்தார்.


Go to Download Link → →

Report Inappropriate content / Link not working ?