The Direct Link

Search Any Links, Share Direct Links

General

இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) - அசத்தல் சாதனை..!!

By Mariammal, Published on 6 months ago, 93 Views
Tags : #AI

இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) - அசத்தல் சாதனை..!! இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.

அச்சு அசலாக பெண் உருவில்காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ ரோபோபன்மொழி புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில்இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.

இதுகுறித்து மேக்கர்லேப்ஸ் நிறுவனம் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொலி பதிவில், ‘‘ ஐரிஸ் எனும் ஏஐ ஆசிரியர் ரோபோவை அறிமுகம் செய்வதில் மேக்கர்லேப்ஸ் எஜுடெக் பெருமை கொள்கிறது. இதன் மூலம் கற்றல் துறையில் புதிய போக்கை உண்டாக்கி புத்தாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்கிறோம்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

தனிப்பட்ட முறையில் கற்று கொள்ளவும், பலவிதமான கற்றல்-கற்பிக்கும் முறைகளை பின்பற்றவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படிக்கவும் ஐரிஸ் ரோபோகைகொடுக்கும். இந்த கண்டுபிடிப்பு கேரள கல்வி பரப்பில் புதியவளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?