The Direct Link

Search Any Links, Share Direct Links

General

Tamilagathil Oru Nithiarasar

By Dhanalakshmi, Published on 2 years ago, 502 Views
Tags : #இராஜராஜ_சோழன் #மனுநீதிச்_சோழன் #முதலாம்_இராஜ_ராஜன் #கரிகாலன்

தமிழகத்தில் ஒரு நீதியரசர் இராஜராஜ சோழன் ,மனுநீதிச் சோழன்

-

                         இராஜராஜ சோழன் இவரைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் இவரால் இவருடைய ஆட்சி காலத்தில் மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் உள்ள பல விஷயங்கள் தமிழகத்தில் உண்டு. அவை தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கும் அழியாத புகழையும் பெருமையையும் பெற்றுத் தருகின்றன.இதற்குக் காரணம் ,இவரது ஆட்சி முறை ,இராணுவம் ,நுண்கலை,கட்டிடக் கலை,நிர்வாகம் செய்யும் திறமை ,சமயம் இலக்கியம்  ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் போன்றவையே.

             காலத்தால் அழியாதப் புகழைப் பெற்ற  இராஜ ராஜ சோழன் எனும் மன்னனைப் பற்றி இன்று தனிநபர் முதல் மக்களின் மத்தியில்பரபப்பை ஏற்படுத்தும் ஊடகங்கள் வரை அனைவரும் பேசி களிப்படைகின்றனர். தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசர்கள் கரிகால் சோழன் ,இராஜேந்திர சோழன் என்று பலர் உண்டு.ஆனால் இவர்களிலிருந்து  சற்று வித்தியாசப் பட்டவர் மனுநீதிச் சோழன்.

ஏனென்றால் மனுநீதிச் சோழன் நீதிநெறி தவறாது தனது செங்கோல் வளையாமல் ஆட்சி செய்த மன்னன் ஆவார். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் வேறுபாடில்லாது  நீதி  வழங்கியவர். தன் மகன் வீதி விடங்கன் சென்ற தேரில் அகப்பட்டு இறந்த தனது கன்றுக் குட்டிக்காக ,அதன் தாய்ப்பசு நீதி கேட்டு ஆராய்ச்சி மணியை அடித்தபோது அந்த பசுவிற்கு நீதி வழங்குவதற்காக தான் உயிராய் வளர்த்த தன் மகனை அதே தேர்க்காலில் கிடத்தி தன் மகன் இறக்க தானே காரணமாயிருந்தார்.

          "மனுநீதிச் சோழனின் சமநீதியை இந்த உலகம்

          இன்றும் என்றும் மறக்காது. " 

                                மற்ற சோழ அரசர்களான முதலாம் இராஜ ராஜன்,கரிகாலன்     போன்றவர்களைப் பற்றி இன்றளவும் பேச அவர்களின் கட்டிடக்கலையில் உருவான தஞ்சை பெரியகோவில், கல்லணை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும் பொழுதுநீதியோடும், நியாயத்தோடும் வாழ்ந்ததற்காக மட்டுமே ஒருவர் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார் என்றால் அது நீதியரசர் மனுநீதிச்சோழன் மட்டுமே.அப்படிப் பட்ட ஒருவரின் புகைப்படமோ,அவரின் கட்டிடக்கலையோ அல்லது அவரது ஆட்சிக் காலத்தில் உருவாக்கபட்டவை என்று அவரின் புகழையும்,பெருமையையும் பறைசாற்றும் எந்த சான்றும் இன்றளவும் இல்லாதது ஏன்? அவரின் ஆட்சி முறையில் தமிழகம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதற்கான தகவல்கள் மறைக்கப்பட்டதா அல்லது யாரும்  அறிய முற்படவில்லையா? அரசியல் ,சினிமா ,விளையாட்டு என அனைத்தையும் பற்றி பேசும் போது டகங்கள் இவரைப் பற்றி பெரிதும் பேசாதது ஏன்???


Go to Link →

Report Inappropriate content / Link not working ?