The Direct Link

Search Any Links, Share Direct Links

General

Panimaya Matha Thirukovil Thoothukudi

By Banu, Published on 2 years ago, 443 Views
Tags : #thoothukudi #matha_kovil #tuticorin #temple #matha #இந்த_திருவிழாவினைக்_காண்பதற்கு_ஆவல்_கொண்டு_உள்ளனர் #thoothukudi

பனி மயமாதா திருக்கோவில் அழகே உருவான மாதா சாந்த சொருபியான அவள் தோற்றத்தினை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் நாள் முழுவதும். மேலும் அவள் ஏசுவை தன்னோடு அரவணைத்து வைத்திருக்கும் சிலையோ அழகோ அழகு.

-

அழகே உருவான மாதா சாந்த சொருபியான அவள் தோற்றத்தினை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் நாள் முழுவதும்.  மேலும் அவள் ஏசுவை தன்னோடு அரவணைத்து வைத்திருக்கும் சிலையோ அழகோ அழகு. 

மாதா கோவிலுக்குள் நுழைந்த உடனே நமது மனதும் உடலும் புத்துணர்ச்சியைத்தரும். மனம் முழு அமைதியை நாடுவதை அறியலாம். பக்தி மணம் தவழும் இடத்தில் நாமும் பயபக்தியோடு நினைத்தால் நன்மையே நடக்கும்.  அங்கிருந்து நாம் சற்றே நடந்தால் வண்ணமிகு கடல். கொள்ளைகொள்ளும் பேரழகு. கடல் இருக்கும் இடத்தில் நமது வாழ்க்கை இருப்பது கடவுள் நமக்கு கொடுத்த அருட்கொடை என்று நினைப்பேன்.

சுமார் பல நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட புண்ணிய மாதா அன்பும் அருளும் நிறைந்த மாதா. பெண்களுக்குள் நீவிர் புனிதமானவள் என்று உலகம் அறிந்ததே.அத்தகைய புனித மாதாவே உன்னை நினைப்பதிலும் உனக்கு திருவிழா நடத்துவதற்கும் எங்களுக்கு கிடைத்த பெரும்பேரு தான். 

உலகம் முழுவதும் இருந்து உன் தரிசனம் கிடைப்பதற்கு வரும் மனிதர்கள் கோடிக்கணக்கானோர் ஆவர்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவினைக் காண்பதற்கு ஆவல் கொண்டு உள்ளனர். 

எங்களைத் தேடி கடலில் வந்த மாதாவே நாங்களும் உம்மை மனதார ஆராதிக்கின்றோம். அன்புடன் உன் அருளை வேண்டி நிற்கின்றோம். கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒருவராக எம்மை ஆசிர்வதிக்க வேண்டாம். எம்மை உம்மைப் போல் தனித்துவம் கொண்ட மனிதராக வாழ எம்மை ஆசிர்வதிக்க வேண்டும். ஏழ்மையும் வறுமையும் இல்லாது செல்வ செழிப்புடன் வாழவும் பூமித் தாய்க்கு எங்களால் ஏதேனும் நன்மை உண்டாகும் படியான வாழ்க்கையை எங்களுக்கு தரும் படியும் உம்மைத் தாழ்மையடன் வேண்டிக் கொள்கிறேன்.

இத்தகைய புனித மாதாவின்  திருவிழா ஐ{லை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வெள்ளைப்புறாக்கள் பறக்கவும் மேலும் தாளங்கள் முழங்கவும் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. ஏராளமான கடைகள் இராட்டினம் வேடிக்கை விளையாட்டுகள்  என்று எண்ணற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாதா கோவில் திருவிழா சுமார் 10 நாட்கள் நடைபெற்றது. ஊரே திருவிழா கோலம் கண்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் மாதாவையும் அத்துடன் கடல் நீரோடு சிறிது விளையாடி பொருட்கள் வாங்கியும் மகிழ்ந்தனர். இத்திருவிழா ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

 

மீண்டும் இத்திருவிழாவினை காண ஆவல் கொண்டு உள்ளோம். அடுத்த வருடம் இத்திருவிழாக்காண அனைவரும் வரவேண்டும்.

 


Go to Link →

Report Inappropriate content / Link not working ?