The Direct Link

Search Any Links, Share Direct Links

movies பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

By Mariammal, Published on 6 months ago

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் எக்ஸ் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.2 குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விலை மார்ச் 15-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் செலவு கணிசமாக குறையும். அத்துடன் 58 லட்சம் கனரகவாகனங்கள், 6 கோடி கார்கள்,27 கோடி இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Continue Reading
general பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு

By Mariammal, Published on 6 months ago

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு சென்னை: பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக (Establishment and Supervision Charges) செலுத்த வேண்டி இருந்தது. Continue Reading
general விஜய்யின் ‘கோட்’ படத்தில் த்ரிஷா சர்ப்ரைஸ் நடனம்?

By Mariammal, Published on 6 months ago

விஜய்யின் ‘கோட்’ படத்தில் த்ரிஷா சர்ப்ரைஸ் நடனம்? சென்னை: விஜய் நடித்து வரும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாடல் ஒன்றில் விஜய்யுடன் இணைந்து அவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Continue Reading
general ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு

By Mariammal, Published on 6 months ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. அந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பிடம் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த குழு தற்போது ஆலோசனைகளை முடித்துக்கொண்டு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தாக்கல் செய்தது. 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம், பலன்கள் குறித்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமே. முன்கூட்டியே திட்டமிட்டால் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழி உள்ளது. Continue Reading
general ரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Mariammal, Published on 6 months ago

ரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரமலான் நோன்பு திறப்பையொட்டி இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இஸ்லாமிய மதத்தினரின் பண்டிகைகளில் முக்கியமானது ரமலான். ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமிய மதத்தினர் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து, இஸ்லாமிய மதத்தினர் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ரமலான் நோன்பு திறப்பையொட்டி கொளத்தூரில் இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2024) முகாம் அலுவலகத்தில், " உதவுதல் நம் முதல் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Continue Reading
general அடேங்கப்பா..! ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை

By Mariammal, Published on 6 months ago

அடேங்கப்பா..! ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை தங்கம், வெள்ளி விலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: அதன்படி, நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 930 ஆக இருந்த நிலையில், இன்று 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 720 ரூபாயிலிருந்து 48 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னயில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை கடக்கும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Continue Reading
general தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை - 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்கள்

By Mariammal, Published on 6 months ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை - 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்ற சூளுரையுடன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தங்களது பணி தொடரும் என அறிவித்தார். இதையடுத்து, தங்களது கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, மகளிரை கவுரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தலைமையில் புதிய அணி ஒற்றை நேற்று (மார்ச்-7) அறிவித்தார். அதன்படி, மாநில செயலாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரையும் நியமித்தார். அத்துடன், மாநில பொருளாளராக கோவையை சேர்ந்த சம்பத்குமார், மாநில துணைச் செயலாளர்களாக மதுரையை சேர்ந்த விஜயன்பன் கல்லணை மற்றும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு ஆகியோரையும் நியமித்தார். நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியிருந்த நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையத்தளம் உள்ளிட்டவற்றிகான QR cord மற்றும் லிக்குகளை தவெக தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. Continue Reading
general Significance of Maha Shivaratri

By Admin, Published on 6 months ago

Maha Shivratri is an auspicious Hindu festival, which marks the union of Lord Shiva and Goddess Parvati. This year, the festival will be celebrated on March 8. The fourteenth day of every lunar month or the day before the new moon is known as Shivratri. Among all the twelve Shivratris that occur in a calendar year, Mahashivratri, the one that occurs in February-March is of the most spiritual significance. Significance: Spiritual Awakening: Maha Shivaratri is a time for self-reflection, introspection, and meditation on Shiva, who embodies the principles of destruction and recreation. These are seen not as negative aspects but as necessary for the positive renewal of the universe and one's self. Marriage of Shiva and Parvati: Some traditions celebrate it as the night when Shiva and Parvati were married, symbolizing the union of the divine masculine and feminine, balancing the world's energies. Shiva's Cosmic Dance: Another belief is that it marks the occasion of Shiva's Nataraja form, performing the cosmic dance of creation, preservation, and destruction. Observances: Fasting: Devotees fast throughout the day and night, consuming only fruits, milk, and other specific foods permitted during fasting. Night Vigil (Jagaran): People stay awake all night, offering prayers to Shiva. This vigil is a spiritual practice meant to overcome darkness and ignorance in life. Rituals and Offerings: Worship involves special pujas, bathing the Shiva Lingam with milk, honey, water, and bael leaves, and chanting mantras, particularly the "Om Namah Shivaya". Visiting Temples: Many devotees visit Shiva temples or go on pilgrimage to Jyotirlingams, which are considered to be the most sacred abodes of Shiva. Cultural Impact: Continue Reading
Prev    ||   Next